Sunday, September 12, 2010

தியானம்

கண்டறியாத ஓளியும்,
தூங்கமுடியாத ஆனந்தமும்,
உணர்ந்தறியாத தெளிவும்,
கட்டுபாடற்று தன்னை தானே
உருவாக்கிகொள்ளும் கட்டுப்பாடும்,
உணர்கிறோம் என பிரித்தறியமுடியாத
உணர்வும் கொள்ளும் நிலையே தியானம்.

சுருங்க சொன்னால்,
உடலே ஓளியாகி,
உள்ளம் மறைந்து,
உணர்வு தெளிவாகி,
தானின்றி வேறில்லை,
என்பதே தியானம்.

No comments:

Post a Comment