Friday, March 25, 2011

செயல்கள்

இந்த மாதம் செயல்களை பற்றி அலசுவோம். முதலில் எல்லா மனிதருக்கும் வாழ்வில் மூன்று நிலைகள் உள்ளன. அவை முதல் நிலை – சோம்பேறித்தனம்- உள் உணர்வு நிலையில் சொன்னால் உள்ளே வெற்றிடத்தை உணரும் நிலை ஆனால் இது வளர்ச்சி அல்ல இது சக்தி ஏதுமற்ற நிலை. இது முதல் நிலை இந்த நிலையிலேயே நாம் வளர்ச்சி பெற்றுவிட்டோம் என்று நினைத்துகொண்டு நின்றுவிடுபவர்கள் பலர். ஆன்மீகத்தை தேடுபவர்களில் பலர் இந்நிலையில் நின்றுவிடுகின்றனர். இந்த நிலையை வாழ்ந்து கடந்து விட்டால் அடுத்த நிலை செயல்பாடு- உள் உணர்வு நிலையில் ஆசை அல்லது ஏதாவது செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தால் செயல்படுதல் என்ற நிலையிலேயே பெரும்பாலானோர் செயலை செய்கின்றனர் அவ்வாறு செய்வது தவறல்ல, ஆனால் இந்த நிலையின் உச்ச கட்டம் என்னவெனில் நம் உள்ளே உள்ள மகிழ்ச்சியின் விளைவாகவும் நம்மிடம் பொங்கி பெருகும் சக்தியின் வெளிப்பாடாகவும் படைப்பு தன்மையில் நாம் கரைந்து போகும்போது ஏற்படும் ஆனந்ததிற்காகவும் செயல்களை செய்யும்பொழுது நாம் மறைந்து செயல்படுதல் மட்டும் அங்கிருத்தலே செயல்பாடு நிலையின் உச்ச கட்டம். மூன்றாம் நிலை மெளனம். உள் உணர்வு நிலையில் அது நான் இன்றி வெறும் சக்தியாக நம்மை உணர்தல். முதல் நிலையான சக்தியற்ற சோம்பேறித்தனத்தையும், இரண்டாம் நிலையான செயல்பாடுகளில் கரைதலையும் கடந்த பிறகு மூன்றாம் நிலையான மெளனத்தில் சக்தியற்ற நிலை இல்லை, செயல்பாடு தானாக நிகழ்கிறது. உள்ளே மெளனமாக உணர்கிறோம், நம்மை சுற்றி அனைத்தும் தானாகவே நிகழ்கிறது. அதாவது நாம் செயல்களை செய்வதில்லை என்பதல்ல உண்மையில் நாம் மிக அதிக செயல்களை செயல்படுத்துவோம். ஆனால் நாம் செயல்களை செய்கிறோம் என உணர்வதில்லை மாறாக நாம் செய்யும் செயல்களும் தானாகவே நிகழ்பவைதான் என்பதை காணும் கண்களை பெற்றுவிட்டோம் என்பதே மூன்றாம் நிலை. இவையே செயல்களின் அல்லது மனிதரின் மூன்று நிலைகள்.
மற்றவை எனது அடுத்த மாத பதிப்பில்..........

Sunday, March 20, 2011

ஊழல்கள்,அறிவியல் கோட்பாடு,மதிப்பீடு

முதலில் போன மாதம் எழுதாமல் போன விவரத்தை சொல்லிவிடுகிறேன். போன மாதம் முழுவதும் எதைப்பற்றி எழுதுவது என்ற தெளிவு வரவில்லை அது மட்டுமல்ல போன மாதம் முழுவதும் எழுதுவதற்கு போதுமான நேரமும் கிடைக்கவில்லை ஆனால் இந்த முறை எழுதாமல் விட்டுவிட கூடாது என்பதில் நான் கவனமாக இருந்த காரணத்தால் இம்முறை எழுதுவதற்கு பல விஷயங்கள் கிடைத்துள்ளன நாம் முடிந்த வரை இந்த மாதமே அவைகளை எழுத முயல்கிறேன் முடியாவிடில் அடுத்த மாதமும் எழுதும் விஷயம் தொடரும்.

உங்களுக்கு ஓர் செய்தி போன மாதம் நான் எழுதாத காரணத்தால் இம் மாதம் இரண்டு முறை எழுதி இடுகைகளை இடப்போகிறேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துகொள்கிறேன்.

விஷயங்களை ஒன்றன்பின் ஒன்றாக பார்ப்போம்.

முதல் விஷயம்.

மதிப்பீடு

எப்படி நாம் மதிக்கிறோம் அதாவது எதனை அளவுகோலாக கொண்டு மற்றவர்களை மதிக்கிறோம் என்பதை பற்றிய ஒரு புதிய புரிதல் எனக்கு சமீபத்தில் கிடைத்தது. அதனை முடிந்தவரை தெளிவாக உங்களுக்கு விளக்க விழைகிறேன்.
எடுத்துகாட்டாக நம்மை விட உயர்ந்த இடத்தில் இருப்பவராக எதோ ஒரு வித்தில் நாம் கருதும் மனிதர் நம்மை மதிப்போடு நடத்தினால் நாம் நாம் வளர்ந்துகொண்டிருப்பதால் தான் அவர் நம்மை மதிப்பதாக நினைத்துகொள்ள வாய்ப்பு உண்டு ஆனால் அது அவ்விதம் இல்லாமல் அவ்வாறு மதிப்பது நாம் உயர்ந்தவராக மதிப்பவரின் பெருந்தன்மையாக கூட இருக்கலாம்.

இரண்டாவது விஷயம்

அறிவியல் கோட்பாடு

ஒரு அறிவியல் கோட்பாடு 1980களில் கணக்கிடப்பட்டது. அது பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது என்பதை குறித்தது. அதாவது அந்த அறிவியல் கோட்பாட்டின் படி பிரபஞ்சம் ஓர் விதிப்படியே செயல்படுகிறது. அந்த விதி கீழ்கண்டவாறு எழுதப்படுகிறது.

Z=Z2+C என்பதாகும். விஞ்ஞானிகள் இவ்விதியை பல்லாயிரம் முறை கூட்டி பல நிறங்களில் பல வடிவங்களை கம்யூட்டர் உருவாக்கியுள்ளது அதன்படியே பிரபஞ்சத்தில் எல்லா உருவங்களும் உள்ளன என்பதே அந்த கோட்பாட்டினால் விளைந்த கண்டுபிடிப்பு.

மூன்றாவது விஷயம்

ஊழல்கள்(பணம்)

தினம் தினம் பல ஊழல்களை நாம் சந்திக்கிறோம். எடுத்துகாட்டுகள் சில

2G ஸ்பெக்ட்ரம் ஊழல்
எம். பிகளுக்கு காங்கிரஸ் லஞ்சம்
பல அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம்
ஓட்டு போட பணம்
இந்தியர்களின் வரி பணம் ஆயிரக்கணக்கான கோடிகளில் வெளிநாட்டில் பதுக்கல்

அது மட்டுமல்ல பண விஷயத்தில் சில பரிதாபத்திற்குரிய காமெடிகளும் உள்ளன.

உதாரணமாக, நாம் பொழுது போக்கிற்காக பார்க்கும் திரைப்படங்களில் முன்ணனி நடிகர்களோ, நடிகைகளோ நடித்தால் கோடி கணக்கில் சம்பளம்

நாட்டிற்காக விளையாட்டு அணிகளில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்கு மட்டும் கோடிக்கணக்கில் சம்பளம், ஆனால் நம் தேசிய விளையாட்டான ஹரக்கி உட்பட மற்ற விளையாட்டு வீரர்களுக்கு மிக குறைந்த சம்பளம்.

மற்றும் யாருமே நம் நாட்டில் மட்டும் இப்படி எளிதாக ஊழல் பரவ என்ன காரணம் என்பதை போதுமான அளவு ஆழமாக பார்க்கவில்லை என்பதே என் கருத்து அதாவது அந்த பிரச்சனையை மனோ ரீதியாகவும் அணுக வேண்டும் என்னை பொறுத்த வரை இலஞ்சம் எளிதாக நம் நாட்டில் வளர காரணம் நம் மனதில் இன்னும் மிச்சமிருக்கும் அடிமை உணர்வே ஏனெனில் அடிமை உணர்வின் காரணமாகவே நாம் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பார்க்கிறோம். ஒப்பிட்டு பார்த்தலின் காரணமாக பொறாமை படுகிறோம் பொறாமை படுவதன் காரணமாக வேகமாக வளர முயற்சிக்கிறோம் வளர்ந்தவர்கள் பாதுகாப்பை தேடுகிறோம். வேகமாக வளர முயற்சிப்பதால் இலஞ்சம் வாங்குகிறோம். பணத்தால் வளர்ந்தவர்கள் பாதுகாப்பை தேடுவதால் இலஞ்சம் கொடுக்கிறோம்.
மற்றவை நான் இம்மாதமே எழுத உள்ள அடுத்த பதிப்பில்.............................