Wednesday, August 31, 2011

குருவின் மீது கவிதை

வைரமுத்துவின் தண்ணீர் தேச பாதிப்பு.

குரு.

குரு கடந்ததின் மனித உருவம்
மனித மொழி பேசும் பிரபஞ்சம்
காலத்தை கடந்த பிறகும் கட்டுபட்ட
மனிதனாய் தோன்றும் உருவம்.

குரு...
ஒரு வகையில் நம்பகத்தன்மை
ஒரு வகையில் மரணம்

நான் ஒரு தேவ பைத்தியம்
இல்லை. நான் குருகாதலன்.
நீங்கள் கேட்கிறீர்கள்
ஆன்மீகம் சலிக்கவே சலிக்காதா
?

குருவும் பிரபஞ்சமும் சலிப்பதில்லை.
வாருங்கள் குரு அனுபவம் பெறுவோம்.
இல்லை...
எனக்கு குருவின்மீது நம்பிக்கையில்லை.

நீ உயிர் வாழ்வதே பிரபஞ்சத்தின் கருணையினால்தான்.
நம்பமுடியவில்லை.
பிரபஞ்ச பயம் தவிர்
குருவின் பெருமை நிறைய பேர் அறியவில்லை.


ஆரவாரமே சமுதாயம் சமுதாயம்
ஆகையால் ஆரவாரத்தை ஆராதிக்கிறது.
இந்த பிரபஞ்சம் எல்லையற்றது என்கிறேன் நான்.
நான் அறியகூடியது மட்டுமே பிரபஞ்சம் என்கிறீர்கள்
நீங்கள்.

என் குருவின் மீது நான் கொண்ட அன்புக்கு
எனது சிரிப்பும் அழுகையுமே அடையாளம்.
ஆன்மீகத்தில் ஆண்- பெண் என்ற பேதமில்லை.
விழிப்புணர்வு என்பது ஒன்றுதான்.
உண்மையான குருவை
இதயத்தால் உணர்ந்த
ஒவ்வொரு மனிதனும்
சந்நியாசிதான்.

குருவும் பிரபஞ்சத்தைப்போலத்தான்
அவரின் மூலமும் அழிவதில்லை.
குரு. அவர் ஒரு தனிவகை.
உடலில் வாழும் பிரபஞ்சம்

நான் வெண் நிலவை பார்த்தபோதும்
குருவின் கண் பார்த்தபோதும்
மட்டும் பிரமித்திருக்கிறேன்.
நீ கேட்கிறாய்.


எனக்கு குரு தேவைதானா
?
தேவையற்று செய்யும் காரியங்களே
ஆன்மீக வளர்ச்சி அளிக்கின்றன.
தேவையின் காரணமாக செய்யும் காரியம்
கட்டாயம்.

வாழ்வோம் என்ற நம்பிக்கையே
கற்பனை, கனவுகளின் ஆதாரம்
இறப்பு உறுதியாகிவிட்டால்
கற்பனை கனவு நின்றுவிடும்.

குரு நிலவின் வெண்மையையும்,
தென்றலின் குளிர்ச்சியையும்
குழந்தையின் வெகுளித்தனத்தையும்
ஞானியின் சிரிப்பையும்

சிங்கத்தின் கம்பீரத்தையும்
தந்தையின் கண்டிப்பையும்
தாயின் இதயத்தையும்
இரவின் அழகான மெளனத்தையும் கொண்டவர்.வாழ்வில் நாளை என்ன
நடக்கபோகிறது என
அறிந்துகொள்ளமுடியாத
தன்மைதான் அதன் பரவசம்.

இந்த நொடியே வாழ்வின் ஒரே உண்மை
வாழ்க்கையின் போக்கில் வளைந்துவிடு
வாழ்க்கை வளமாகிவிடும்
உன்னை வளர்த்துவிடும்.

சக்தியே வாழ்வின் மூலம்
இயக்கமே வாழ்க்கை
இயக்கமின்மையே மரணம்
இயக்கமில்லாமலும் சக்தி உள்ளது.

மரணத்தின் சுவையை அறிந்தவர்களுக்கே
வாழ்வின் சுவை தெரியும்
பிறகு நீ வாழ்வை
நேசிப்பாய் மரணத்திலும் வாழ்விருப்பதை அறிவாய்.

நீ குருவை உணர்ந்தால் ஒரு குருவில் வாழ்வும்
மரணமும் ஒரே நேரத்தில் இணைந்திருப்பதை
அறிந்துகொள்வாய். பிறகு எல்லா உயிரகளுக்கும்
ஒவ்வொரு நொடியும் பிறப்பும் இறப்பும் தொடர்ந்து

நடந்துகொண்டேயிருப்பதை முழுமையாக
உணர்ந்துகொண்டால் நீ இவை இரண்டையும்
கடந்த நிலை ஒன்று இருப்பதையும் அறியகூடிய
சாத்தியக்கூறு உனக்குள் பிறக்கிறது.

அந்த நிலையை அடைந்துவிட்டால் பிரபஞ்சத்தோடு
இணைந்து நீயும் பிறப்பு இறப்பு என்னும் நிலை கடந்த
உணர்வை அடைந்து பிரபஞ்சத்தின் தொடர் கொண்டாட்ட
நிகழ்வில் ஒரு பகுதியாக மாறிவிடுவாய்.

அவ்வாறு நீ மாறிவிட்டால் மட்டுமே
பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை உனது
வாழ்வு முழுமையடைகிறது. தொடர்ந்து
நடக்கும் உற்சவமாகிறது.

அந்த நிலையே
வாழ்வின் உச்சம். அதுவே நீ செய்யும்
குரு சேவை. அதுவே கடவுள்தன்மை,
சத்தியம்,அழகு.Saturday, August 20, 2011

சமூக முகம்

11.8.2011

1.நான் இத்தனை நாட்களாக நினைத்துக்கொண்டிருந்த விஷயம் தவறு என்பது எனக்கு புரிந்துவிட்டது. அந்த விஷயம் என்னவென்றால் நான் சமூக முகம் அதாவது சமூகத்தைப் பொறுத்தவரை நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்ற தேவை. அதாவது நீங்கள் என்ன வியாபாரம் அல்லது வேலை செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு நாம் அளிக்கும் பதில். அந்த பதிலை அனைவரும் உருவாக்கி வைத்துள்ளார்கள். சில பதில்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை எடுத்துக்காட்டாக, மருத்துவர், கட்டுமான பொறியாளர், வக்கீல் போன்ற பதில்கள், அந்த பழைய மதிப்பு வாய்ந்த பதில்களோடு வெளிநாட்டில் கணிப்பொறி வேலை செய்கிறேன் என்பதும் மதிப்பு வாய்ந்த பதிலாக மாறியுள்ளது. அல்லது ஏதாவது ஒரு அரசு வேலையும் மதிப்பு வாய்ந்ததே. மதிப்பற்ற பதில்களும் இருக்கின்றன. படம் வரைவது, கவிதை எழுதுவது, எழுத்தாளர் போன்ற மதிப்பற்ற பதில்களும் இருக்கின்றன. அவை மதிப்புள்ள பதில்களாக மாற வேண்டும் எனில் நீ அவற்றின் மூலம் புகழடைய வேண்டும். இதில் எனது தவறு அந்த தவறை நான் நன்கு அறிந்தே செய்தேன். நான் சமூகத்தை மதிப்பவனல்ல. காரணம் என்னைப் பொறுத்தவரை சமூகம் என்ற ஒன்று உண்மையில் இல்லை. இருப்பவர்கள் தனிமனிதர்கள் மட்டுமே. நான் சுயநலத்தை ஆதரிப்பவன், ஏனெனில் என்னைப் பொறுத்தவரை அனைவரும் சுயநலமாக இருப்பார்களேயானால் பொது நலம் தானாகவே அங்கு வந்துவிடுகிறது. எனவே நான் சமூகத்தைப் பொறுத்த வரை என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்ற கேள்வியின் பதிலுக்காக நான் இதுவரை என் வாழ்வில் ஒரு நொடியைக் கூட செலவழித்தது கிடையாது. நான் எனக்கு மகிழ்ச்சியூட்டும் காரியங்களை மட்டுமே செய்து வந்துள்ளேன். அவை சில சமயங்களில் அந்த கேள்விக்கு பதிலாக அமைந்தது உண்டு. இப்போது சமூக முகம் இன்மையே முடிச்சாக உள்ளது. இதன்மூலம் இன்றைய உலகில் அனைவருக்கும் சமூக முகம் ஒரு கட்டாயத்தேவை என்பதை நான் உணர்ந்துள்ளேன். ஆனால் நான் எனக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்கிறேன். அதாவது, மற்றவர்கள் இந்த சமூக முகத்தை உணர்வற்று அதாவது தானாகவே தேவையின் காரணமாக, சமூக முகம் உருவாகிவிடுகிறது, சமூக முகம் உணர்வற்று குழந்தையாக இருப்பதிலிருந்தே வளர தொடங்கிவிடுகிறது. எனவே நாம் நம் சமூக முகத்தை காப்பாற்றிக் கொண்டே இருக்கிறோம் என்ற உணர்வே பலருக்கு இருப்பதில்லை. அந்த சமூக முகத்தைப் பற்றிய உணர்வுடன் இருந்தால் மட்டுமே தேவையற்ற சமயங்களில் அதை விட்டு வெளியேறவும் முடியும். அவ்வாறு தனது சொந்த சமூக முகத்தைப் பற்றிய உணர்வுடன் அனைவரும் இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன்.

2. நான் சாலையில் நடந்து செல்லும்போது எதிரில் வருபவர்களுடைய கண்களைப் பார்க்கிறேன். யாரும் தனக்கு எதிரே உள்ள சாலையை பார்க்கவில்லை, மற்றும் தனது சொந்த மனங்களில் மூழ்கியிருக்கிறார்கள் என்ற உணர்வே எனக்கு ஏற்படுகிறது. எனவே சாலையில் அனைவரும் தூக்கத்தில் நடக்கும் வியாதி கொண்டவர்கள் நடப்பதைப் போலவே நடக்கிறார்கள். சில சமயங்களில் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்போது, நடந்தால், அவ்வாறு நடப்பதாக நானும் உணர்வதுண்டு.

3. இந்திய அடிமைத்தனம்

இந்தியாவில் அனைவரும் அடிமைகளே. முதலாளி தொழிலாளி வேலையை விட்டு போய்விட்டால் அடுத்த திறமையான தொழிலாளி கிடைப்பது கடினம் என்று கருதி, தொழிலாளியை அனுசரித்துப் போகிறான். தொழிலாளி முதலாளி தன்னை வேலையை விட்டு அனுப்பிவிட்டால் இதைவிட நல்ல வேலை தனக்கு கிடைப்பது கடினம் என்று கருதி முதலாளியை அனுசரித்துப் போகிறான். வியாபாரம் செய்பவனோ, வாடிக்கையாளர்கள் நம்பிக்கையிழந்துவிட்டால் என்ன செய்வது என பயந்து வியாபாரம் செய்கிறான். வாடிக்கையாளர் இந்த வியாபாரியை அனுசரிக்காவிடில் இந்த பொருள் கிடைப்பது கடினம் என்று வியாபாரியை அனுசரித்து போகிறான். சுய தொழில் செய்பவனோ, நமக்கு வேலை கொடுப்பவர்கள் தொடர்ந்து கொடுப்பார்களா என்று சந்தேகப்பட் கொண்டே இருக்கிறான். இவ்வாறு இந்தியாவை பொறுத்தவரை அனைவரும் பண அடிமைகளே அதில் பணக்காரனா ஏழையா என்பது எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்துவதில்லை.

4. நீங்கள் ஆன்மீகத்தை நோக்கி திரும்ப வேண்டும் என விரும்பினால், ஒன்றே ஒன்றை செய்யுங்கள் அதாவது, எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் எந்த முக்கியத்துவத்தையும் தராதீர்கள், இது முதல் படி. நான் செயல்களை செய்யாதீர்கள் அல்லது செயல்களை நிறுத்துங்கள் என்றோ கூறவில்லை. செயல்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விட்டுவிடுங்கள் என்றுதான் கூறுகிறேன். எண்ணங்கள் வரட்டும், போகட்டும் அவைகளுக்கு எந்த முக்கியத்துவத்தையும் அளிக்காதீர்கள். அதற்கு பதிலாக மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். அவை. 1. உடல் 2. உணர்ச்சி 3. உணர்வு. அப்போது ஒருவேளை நீங்கள் ஆன்மீகத்தில் நுழையக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது.

5. நீங்கள் உள்ளே முழுமையாக இருந்தால் நீங்கள் வெளியே இருக்கிறீர்கள், நீங்கள் வெளியே இருந்தால், நீங்கள் எப்போதும் உள்ளேயே இருக்கிறீர்கள்.

இப்படிக்கு தேவ பித்தன்......

மற்றவை அடுத்த மாதம்.........