Sunday, March 30, 2014

இன்றைய பகிர்வு

நேற்றும் அதற்கு முந்தைய நாளும் சனி ஞாயிறாக இருந்துவிட்ட காரணத்தால் என்னால் எழுத முடியவில்லை.

பகிர்தல் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் பகிர்தலின் மூலம் மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கிறது. நாம் எதை பகிர்ந்து கொள்கிறோம், எவ்வளவு பகிர்ந்து கொள்கிறோம் என்பது முக்கியமல்ல. பகிர்ந்துகொள்கிறோம். என்பதே முக்கியம். ஏனெனில் நாம் பகிர்ந்துகொள்கிறோம் என்ற உணர்வே மகிழ்ச்சி தருகிறதே அன்றி எதை, எவ்வளவு பகிர்ந்துகொள்கிறோம் என்பதை பொறுத்து மகிழ்ச்சி அமைவதில்லை. அதேபோல் பகிர்தலில் சிறிய பகிர்தல், பெரிய பகிர்தல் என்றெல்லாம் ஏதுமில்லை. பகிரும் உணர்வு மட்டுமே அங்கு முக்கியம். அந்த உணர்வே மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே முடிந்த வரை முடிந்ததை பகிருங்கள். ஆனால் தயவு செய்து உதவியோ, சேவையோ செய்யாதீர்கள். ஏன் உதவியோ சேவையோ செய்யவேண்டாம் என கூறுகிறேன் என்பதை நாளை பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

No comments:

Post a Comment