Wednesday, December 7, 2016

மரணம்

மரணம் என்ற வார்த்தையின் பொருள் ம-ரணம் ரணம் என்ற வார்த்தைக்கு காயம், புண் என்று பொருள். ம-ரணம். ம என்ற எழுத்துக்கு மற்ற என்ற பொருள் கொண்டால் மற்றரணம்=மரணம் அதை அர்த்தமுள்ள வார்த்தையாக்கினால் ரணமற்ற = மரணம் = ரணமற்ற நிலை. காயமற்ற நிலை.= ரணமற்ற நிலையே மரணம்.

Saturday, December 3, 2016

அதிகாரம்

நாம் நினைப்பதை அடுத்தவரை செய்ய வைப்பதே அதிகாரம். அது நம்மைப் பொறுத்த வரை அவர்களுக்கு உதவி செய்வதாகக் கூட இருக்கலாம்.  அவர்களுக்கு உதவி புரியலாம். ஆனால் நாம் அந்த உதவியை அவர்களுக்கு செய்வதற்கு காரணம் நமது அதிகார வேட்கையே அவர்கள் மீதுள்ள அன்பல்ல. கேட்டபின் செய்யப்படுவது உதவி. கேட்காமல் செய்யப்படுவது அதிகாரம்.

Saturday, November 26, 2016

திரைப்படம் மற்றும் புத்தகம்

அந்த காலத்தில் புத்தகம் படித்த அளவிற்கு யாரும் இந்த காலத்தில் புத்தகம் படிப்பதில்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால் அந்த காலத்தி்ல் புத்தகங்கள் எவ்வளவு வலிமையான ஊடகமாக இருந்தனவோ அதைவிட 2 மடங்கு வலிமையான ஊடகமாக திரைப்படமும் தொலைக்காட்சியும் வடிவெடுத்துள்ளன. எதிர்காலத்தில் திரைப்படத்தையும் தொலைக்காட்சியையும் விட பல மடங்கு வலிமையான ஊடகமாக கைப்பேசியும் இணையமும் விளங்கப்போகின்றன.

Thursday, November 24, 2016

இன்று முதல்......

விடியும் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய நாளே. எல்லா நாளும் புதிய தொடக்கமே. ஒவ்வொரு நாளிலும் நீ புதிதாய் பிறந்ததாய் உணர முடிந்தால் உனக்கு வாழ்க்கை ஒரு வரமே. உனது வாழ்க்கை கடந்த காலத்தால் நிறைந்திருந்தால் உனது வாழ்க்கை ஒரு சாபமே. உனது வாழ்க்கை உனது கையில்.

மறு வரவு

நான் வெகு நாட்களுக்குப் பின் நாளை முதல் திரும்பவும் எழுதப் போகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.